2. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
பத்து சுகாதாரக் கட்டளைகள்
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திட்டம்
வயதுபோடப்பட வேண்டிய தடுப்பூசி
5 வயதுDT மற்றும் டைபாய்டு தடுப்பூசி10 வயதுTT மற்றும் டைபாய்டு தடுப்பூசி16 வயதுTT மற்றும் டைபாய்டு தடுப்பூசிஅருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் இலவசமாக இத்தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.
மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதாரத் திட்டம்இந்தத் திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் அமலில் உள்ளது. அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமணையில் பணிபுரியும் செவிலியர் மாணவ, மாணவியரின் முழு உடல் சுகாதாரத்தை ஆய்வு செய்கின்றனர். இந்த வாய்ப்பினை அனைத்து மாணவ, மாணவியரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
BMI கணக்கிடுதல்ஒவ்வொரு மாணவரும், தங்களுடைய BMI-ஐ கணக்கிட்டு, சரியாக உள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கணக்கிடும் முறை:
BMI = எடை(கி.கி-இல்) / உயரம்(மீ2 இல்)
எடுத்துக்காட்டு:
ஒரு மாணவரின் உயரம்: 150 செ.மீ(1.5 மீ)
எடை: 50 கி.கி. என்றால்
அவருடைய எடை BMI : 50 / 1.5 * 1.5 = 22.22
BMI Rangeஉடல் பருமன்19 - 25சாதாரண உடல் பருமன்26 - க்கு மேல்உடல் பருமன்19 - க்கு கீழ்மெலிந்த உடல்கண்ணொளி காப்போம் திட்டம்
தனிக்கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகள்டிஸ்லெக்சியா, மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகளில் கீழ்க்கண்ட சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வகைக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டையைப்பெற்று, கல்வி, வேலை வாய்ப்புகளில் சலுகை பெற வழி வகை செய்யப்படுகிறது.
புகைப்பிடித்தலால் ஏற்படும் தீமைகள்
- காலையிலும் இரவிலும் பல் துலக்கிடு.
- சோப்பு தேய்த்து தினமும் குளித்திடு.
- சுத்தமாகத் துவைத்த ஆடைகளையே அணிந்திடு.
- நகங்களை வெட்டிச் சுத்தமாக வைத்திடு.
- சாப்பிடும் முன் கைகளைச் சோப்பினால் கழுவிடு.
- மூடி வைக்கப்பட்ட சுத்தமான உணவினையே உண்டிடு.
- காலனி அணிந்தே வெளியே சென்றிடு.
- மலம் கழிக்கக் கழிவறையையே உபயோகித்திடு.
- கழிப்பிடம் சென்று வந்த பின் கைகளைச் சோப்பினால் கழுவிடு.
- சுகாதார மேன்மைக்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திடு.
- ஒன்று முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் 11 கி/டெசி.லி என்ற அளவிலும், அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 12 கி/டெசி.லி என்ற அளவிலும் இருக்க வேண்டும்.
- ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இரத்தசோகை ஏற்படும்.
- நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்
- உடல் வளர்ச்சி குறைதல்
- கற்றலில் கவனக்குறைவு
- படிப்பு மற்றும் பிற செயல்பாடுகளில் குறைவான பங்கேற்பு
- தானிய வகைகள்
- பழ வகைகள்
- கீரை வகைகள்
- இறைச்சி வகைகள்
- தின்பண்டங்கள் (கடலை உருண்டை, கடலை மிட்டாய்)
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திட்டம்
வயதுபோடப்பட வேண்டிய தடுப்பூசி
5 வயதுDT மற்றும் டைபாய்டு தடுப்பூசி10 வயதுTT மற்றும் டைபாய்டு தடுப்பூசி16 வயதுTT மற்றும் டைபாய்டு தடுப்பூசிஅருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் இலவசமாக இத்தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.
மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதாரத் திட்டம்இந்தத் திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் அமலில் உள்ளது. அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமணையில் பணிபுரியும் செவிலியர் மாணவ, மாணவியரின் முழு உடல் சுகாதாரத்தை ஆய்வு செய்கின்றனர். இந்த வாய்ப்பினை அனைத்து மாணவ, மாணவியரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
BMI கணக்கிடுதல்ஒவ்வொரு மாணவரும், தங்களுடைய BMI-ஐ கணக்கிட்டு, சரியாக உள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கணக்கிடும் முறை:
BMI = எடை(கி.கி-இல்) / உயரம்(மீ2 இல்)
எடுத்துக்காட்டு:
ஒரு மாணவரின் உயரம்: 150 செ.மீ(1.5 மீ)
எடை: 50 கி.கி. என்றால்
அவருடைய எடை BMI : 50 / 1.5 * 1.5 = 22.22
BMI Rangeஉடல் பருமன்19 - 25சாதாரண உடல் பருமன்26 - க்கு மேல்உடல் பருமன்19 - க்கு கீழ்மெலிந்த உடல்கண்ணொளி காப்போம் திட்டம்
- கண்ணொளி காப்போம் திட்டத்தின் வழி, கண் மருத்துவர்கள் பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பள்ளி வளாகத்திலேயே கண்டறிந்து, அரசின் விலையில்லாக் கண் கண்ணாடிகளை வழங்குகின்றனர்.
- கருவிழி குறைபாடு உள்ள மாணவ, மாணவியர் விட்டமின் ‘ஏ’ அதிகமுள்ள கேரட், பப்பாளி, ஈரல், மீன் மாத்திரை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தினந்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்துலக்க வேண்டும்.
- வைட்டமின் ‘சி’ குறைபாட்டினால் ஏற்படும் ‘ஸ்கர்வி’ நோ (பற்சிதைவு, ஈறுகளில் இரத்தம் வடிதல்) ஏற்பட்டால் சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்களான கொய்யா, ஆரஞ்சு, நெல்லிக்கனி ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
- காலனி அணியாமல் வெறும் காலால் நடப்பதால் கொக்கிப் புழு போன்றவை பதங்களில் ஊடுருவி, குடல் புழு உருவாகி நோய்கள் ஏற்படும். குறிப்பாக இரத்தசோகை நோய் ஏற்படும்.
- காலனி அணிவதால் நோயகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
- கூர்மையான கற்கள், முள், கண்ணாடித்துகள்களிருந்து காலனிகள் பாதங்களைப் பாதுகாக்கும்.
- பொதுவாகவே அனைவரும் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் (Deworming) செய்யும் மாத்திரைகளை (Albendozole tablets) உட்கொள்ள வேண்டும்.
- சுத்தமாகக் கைகளைக் கழுவி உணவை உட்கொள்வதால் குடற்புழு உருவாவதைத் தடுக்கலாம்.
- அடி வயிற்றில் வலி, செரிமானக் கோளாறு, பலவீனம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மேற்கணட குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
- பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் குடிப்பதால், பலமான எலும்புகள், நல்ல நிலையில் பற்கள், மற்ற உடல் நோய்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும்.
- நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீரினைக் காய்ச்சிக் குடிப்பதால் நீரினால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
- இச்சத்துக் குறைபாட்டினால் வளரும் குழந்தைகள் உடலாலும், மனதாலும் பாதிப்பு அடைகின்றனர்.
- அயோடின் சத்து நிறைந்துள்ள கடல் மீன்கள் மற்றும் அயோடின் கலந்த உப்பைத் தினந்தோறும் உணவில் சேர்த்து உட்கொள்ளும்போது வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி சீராக அமையும்.
- அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை வளர்ச்சி மேம்படும். மூளை வளர்ச்சி மேம்பட்டால் கற்றல் திறன் மேம்பாடு அடையும்.
- கார்போஹைட்ரேட்
- கொழுப்பு
- புரதங்கள்
- வைட்டமின்கள்
- தாது உப்புகள்
தனிக்கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகள்டிஸ்லெக்சியா, மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகளில் கீழ்க்கண்ட சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
- கூடுதல் நேரம் (1 மணி நேரம்)
- கேள்விகளைப் படிக்க, விடைகள் எழுத, சொல்லுவதை எழுதுபவரைப் பயன்படுத்துதல்
- மொழித்தேர்வுப்பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல்.
இவ்வகைக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டையைப்பெற்று, கல்வி, வேலை வாய்ப்புகளில் சலுகை பெற வழி வகை செய்யப்படுகிறது.
புகைப்பிடித்தலால் ஏற்படும் தீமைகள்
- புற்று நோய் உருவாகுதல்
- நுரையீரல் பாதிப்பு மற்றும் சுவாசக் குறைபாடு
- உயர்இரத்த அழுத்தம், இரத்தக் குழாய் அடைப்பு மற்றும் இருதயப் பாதிப்பு
- மூளைக்குச் செல்லும் இரத்தம் தடுக்கப்படுவதால் உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்படுகிறது.